திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி
திருச்சி, டிச.13 திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டிநடைபெற்றது.
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) திருச்சி இலக்கு மக்கள் திட்டம் TI சார்பாக இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நேற்று சமயபுரம் பகுதியில் உள்ள s.கண்ணனூர் சிறப்புநிலை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி நடைபெற்றது இதில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட AIDS கட்டுபாட்டு அலகு ஒருங்கிணைந்த திட்ட மேலாளர் விமல் ஆரோக்கியமேரி கலந்துகொண்டு பேசுகையில் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் திருநங்கைகளுக்குள்ள திறமைகள் வெளிகொணரப்பட்டு ஒதுக்குதல் இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும் என்பதற்காக PDI நிறுவனம் பல வழிகளில் செயல்படுகின்றது என்றும். கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கைகளின் திறமைகளை அரசு அங்கீகரித்து அவர்களுக்கு அனைத்து நல திட்ட மற்றும் வேலை வாய்ப்பு உதவிகளையும் செய்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.
சிறப்புரை வழங்கிய மாவட்ட ICTC மேற்பார்வையாளர்புஷ்பலதா பேசுகையில் விளிம்புநிலை பெண்களுக்கு அரசு சலுகைகள் அதை பெற உள்ள வழிகள் அத்துடன் ஆரோக்கியம் அவசியம் பற்றி எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கி னார். நிகழ்ச்சியின் முடிவில் முன்மாதிரி கல்வியாளர் முரளி நன்றி கூறினார் . நிகழ்ச்சியை PDI திட்ட மேலாளர் முத்துக்குமார் மற்றும் பணியாளர்கள் தொகுத்து வழங்கினர்.