பணம் வைத்து சூதாடிய 12 பேர் மீது வழக்கு பதிவு

0 211
Stalin trichy visit

திருச்சி, டிச. 13  பணம் வைத்து சூதாடிய கும்பல் 12 பேர் மீது வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, எளமனம், புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு, மற்றும் இதனை உள்ளடக்கிய பகுதிகளில் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனையிட்ட நிலையில்  மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் வந்ததன் அடிப்படையிலும் நேற்று மணப்பாறை போலீசார் மணப்பாறை அருகே குமாரப்பட்டி பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த பொழுது பகுதியில் சீட்டுக் கட்டுகளை வைத்து சூதாடிய மணப்பாறை அண்ணாவி நகர் இருளப்பன், இலுப்பூர் கோட்டை தெரு, செல்வராஜ், புதுக்குடி சீனிவாசன், இலுப்பூர் ஜாகிர் உசேன், தேங்காய் தின்னிப்பட்டி கார்த்திக் ராஜா, விராலிமலை நடராஜமூர்த்தி, மற்றும் சுரேஷ்குமார், மணப்பாறை அண்ணாவி நகர் ஷேக் இப்ராஹிம், வாகைகுளம் சதாம் உசேன் ஆகியோரிடமிருந்து சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து  மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.