திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் – பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

0 114
Stalin trichy visit

திருச்சி, நவ.12  திருச்சி மாநகராட்சியும், TMRT 108 அமைப்பும் இணைந்து திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

இந்த  மருத்துவ முகாமினை  மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள், பரிசோதனைகளை பார்வையிட்டார்கள்.

இம்முகாமின் நோக்கம் நமது மாநகராட்சி ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி,
அவர்கள் தினசரி சேவைகளை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பல பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை,  எலும்பு அடர்த்தி பரிசோதனை,  சர்க்கரை நோய் (Diabetic) பரிசோதனை,  பல் பரிசோதனை (Dental Check-up) இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்தார்கள்.

இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி,
Dr. பிரவீன் கிருஷ்ணகுமார் Thillai Dental Care Dr. வருண் பிரசன்னா – Prabhu Diabetic Multi-Speciality Hospital Dr. ரோஷன் – Thillai Medical Center Dr. அர்ச்சனா – The Eye Foundation இம்முகாமை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய TMRT 108 அமைப்பின் அலுவலகத் தலைமைப் பொறுப்பாளர்கள்: விமல் ராஜ் – தலைவர்,  இனியன் அமுதன் – துணைத் தலைவர்,
பிரேம் குமார் – செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.