பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பட்டிமன்றம்

0 455
Stalin trichy visit

காருகுடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவின் முத்தாய்ப்பாக “பாரதியின் கனவு நனவானதா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. “கனவுகள் நனவாகி விட்டன” என்ற தலைப்பில் மாணவிகள் நிகிதா, புவனா, சங்கீதா, சந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.

“கனவு கனவாகவே இருக்கிறது” என்ற தலைப்பில் மாணவிகள் கனிஷ்கா, இலக்கியா, மௌனிகா, ஜீவிகா ஆகியோரும் பங்கேற்றனர். ஆசிரியர் தண்டபாணி நடுவராக செயல்பட்டு சிறப்பித்தார். தலைமையாசிரியர் கீதா ஏற்பாடு செய்திருந்த இந்த இனிய நிகழ்விற்கு சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் நிர்மலா, சத்தியா, தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியை தேவசுந்தரி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து நேச்சர் பவுண்டேஷன் சார்பில் சாந்தனு, அஸ்வின், அருண் பிரசாந்த் மனோஜ், கோகிலா ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு அதன் பாதுகாப்பு கருதி கூண்டுகளையும் வழங்கினர். இந்த நிகழ்வை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும், ஊர்ப்பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.