104 குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம்
திருச்சி, மார்ச் 18 மருங்காபுரி வட்டாரத்தில் வளமிகு வட்டாரத் திட்டத் தின் கீழ், தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள 104 குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியர் மா. பிரதீப் குமார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத் தில், இத்திட்டத்தின் கீழ் 4 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை நேற்று மாவட்ட ஆட்சியர் வழங் கிய அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி வட்டமானது வளமிகு வட்டாரத் திட்டத்தில் தேர்வாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு வட்டாரத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் செயல்பு டுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இந்த வட்டாரத்தில் தீவிர ஊட்டச்சத்து குறை பாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு கோதுமை மாவு, ராகி மாவு, பாசிப்பயறு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கொண்டைக்க டலை, சம்பா ரவை, சிவப்பு அவல், முந்திரி, பாதாம்; பேரீச்சை, சமையல் எண்ணெய், சோயா சங்க்ஸ், நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த ஊட்டச்சத்து உணவு வழங் கப்பட்டு, பின்னர் குழந்தைகளின் எடை, உயரம் கணக்கிடப்பட்டு உள்ளிட்டவை தேவைக்கேற்ப ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டஅலு வலர் மா. நித்யா பேசினார். இந்நிகழ்வில், ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற குழந்தைகள் மற் றும் தாய்மார்கள், அங்கன்வாடி மைய்ய பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.