சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

0 218
Stalin trichy visit

சிறுகளப்பூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு.

. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிறுகளப்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் பங்கேற்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறுகள்பூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் ஒன்றிய கவுன்சிலர் சுதா பெரியசாமி பெருவளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.