ஸ்ரீராமசமுத்திரம் பகவதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0 376
Stalin trichy visit

திருச்சி, மே 14  திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் பகவதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக
காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்த குடம் பால்குடம் எடுத்து வந்து பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது பின்பு மகா தீபாரதனை நடைபெற்றது. பகவதி அம்மனுக்கு பூக்களால் அலங்கரித்து சந்தனக் காப்பு நிகழ்ச்சி நடைபெற்று,  பகவதி அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார். பெண்கள் பூவாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெண்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாட்டினையும் கோவில் நிர்வாகத்தினர் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.