திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு பேர் கைது

0 460
Stalin trichy visit

திருச்சி, மே 14 திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மதுரை ரோடு பகுதியில் போதை மாத்திரைகளை 2 பேர் விற்றுகொண்டிருப்பதாக கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகளை விந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜமீர் பாஷா (20)வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் மொய்தீன் (21)என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு பேரையும் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.