ஸ்ரீ சத்குரு ராஜயோக மடாலயம் – நந்தவனத்தில் உழவாரப் பணி

Sri Satguru Rajayoga Monastery - Cultivation work in Nandavan

0 321
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூரில் உள்ள ஸ்ரீ சத்குரு ராஜயோக மடாலயம் மற்றும் நந்தவனத்தில் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஒருவாரம் சிறப்பு முகாம் அமைத்து அப்பகுதியில் உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இ. வெள்ளனூரில் ஸ்ரீ சத்குரு ராஜயோக மடாலயம் மற்றும் நந்தவனத்தில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர் .அப்போது எஸ் ஆர் சி எம் கேசவன் மாணவர்களுக்கு தியானம் செய்முறை வகுப்பு எடுத்தார். இதனைத் தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் இந்த சமுதாயத்திற்கு நமது பங்கு என்ற தலைப்பில் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஆங்கிலத்துறையைச் சேர்ந்த இன்பராஜ், சமூக ஆர்வலர் நாகராஜ் ,நாட்டு நல பணித்திட்ட ஆசிரியர் சக்திவேல் மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.