ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
திருச்சி, மார்ச் 30 மணப்பாறை அருகே ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கூட்டம்.
திருச்சி மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை கிழக்கு ஒன்றியத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி வேட்பாளர் துரைராஜை, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரினார். அப்போது பேசிய வேட்பாளர் துரைராஜ், திமுக ஆட்சி தொடர அயராது உழைத்து வெற்றிவாகை சூடவேண்டும் என்றார். கூட்டத்தில் திமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.