எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தின விழா

0 267
Stalin trichy visit

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தின விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள ஈஸ்வரி கலையரங்கில் உலக செயல்முறை மருத்துவ தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய தொழில் கட்டமைப்பு (சிஐஐ ) திருச்சி மண்டல தலைவர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மேலும் விழாவில் பங்கேற்ற காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி மாணவ மாணவிகள் மற்றும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட நபர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.

முதுகெலும்பு பாதிக்கப்பட்ட நபர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
இந்திய தொழில் கட்டமைப்பு (சிஐஐ ) திருச்சி மண்டல தலைவர் சோமசுந்தரம், திருச்சி, ராமாபுரம் வளாக
எஸ்ஆர்எம் முதன்மை இயக்குனர் சேதுராமன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.