மத்திய அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்

0 183
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 10   மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக போராட்டத்திற்கு ஆதரவாக  SRMU சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள டிஆர்எம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்ஆர்எம் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4தொழிலாளர் விரோத தொழிற்சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும், 8வது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும், இந்தியா முழுவதும் உள்ள 11 லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ரயில்வே தனியார் மையம் அவுட்சோர்சிங் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ் ஆர் எம் யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்

கடலூர் மாவட்டத்தில் நடந்த விபத்து தொடர்பாக அதிகாரிகளையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், இந்த விபத்துக்கு தொடர்புடையவர்களை உடனடியாக பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும்,

இந்த விபத்து நடைபெற்றதற்கு தனியார் காண்ட்ராக்டர்கள் தான் காரணம் 8மணி நேர கேட் கீப்பர் செய்ய வேண்டிய வேலையை சுமார் 12மணி நேரமாக பார்க்கின்றனர் எனவே தான் இந்த தவறு நடைபெற்றுள்ளது. நடைபெற்ற விபத்தை நியாயப்படுத்தவில்லை ஆனால் அதற்கு மூல காரணம் யார் என்பதை பார்த்து அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில் அகில இந்திய அளவில் ரயில் நிறுத்த போராட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.