சோமசரம்பேட்டையில் “இல்லம் தேடி ஸ்டாலின் குரல்” பிரச்சாரம்
திருச்சி, பிப். 29 திருச்சி மாவட்டம் சோமசரம்பேட்டை பகுதியில் “இல்லம் தேடி ஸ்டாலினின் குரல்” என்ற திண்ணைப் பிரச்சாரம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு வீடுகள் தோறும் சென்று அங்கு இருந்த திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
மேலும் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள டீக்கடை, பூக்கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அப்பகுதியில் இருந்த மந்தையில் அமர்ந்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் பாசிச பாஜகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்தவும், பாஜக அரசால் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக் கூறியும், இரண்டரை ஆண்டுகள் முதல்வரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ஆடுதுறை உத்திராபதி, மணிகண்டம் ஒன்றியத்தை சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், ஊராட்சிக்குட்பட்ட BLA-2, என அனைவரும் கலந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.