பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்

0 153
Stalin trichy visit

திருச்சி, பிப். 19 தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்தது

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களை எடுத்துரைத்துக் கூறினார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- கோடைகால வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதினால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தூய குடிநீர் ஆரோக்கியமான சிறுநீர் கழிப்பிடம் மற்றும் ஆரோக்கியமான கழிப்பறை வசதிகளை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்திட கோரியும் 2003 க்கு பிறகு தமிழ்நாடு அரசின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்திடக் வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.