திருச்சியில் மாநில அளவிலான “பயோபெஸ்ட் – 25” பேட்டிகள்

0 218
Stalin trichy visit

திருச்சி, டிச.17  திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான பயோபெஸ்ட் – 25 பேட்டிகள் – 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் உயிரித்தொழில்நுட்பத் துறை ஹெலிக்ஸ் சங்கத்தின் சார்பில் பயோபெஸ்ட் – 25 என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான குறும்படம், நடனம், பேட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியில் துணைமுதல்வர் முனைவர்.சத்தியசீலன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இப்போட்டிகளில் 13 கல்லூரியில் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  குறும்படம், நடனம், விளம்பரம் போன்ற தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிகல் ஈவண்ட்டோடநிறுவனர் தலைவர் மற்றும் இயக்குனர் ராஜசேகர், வினான் பிக்சர் ஃபேக்டரி நிறுவனர்.விக்னேஷ்காந்தி
ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

நடைபெற்ற இந்த போட்டிகள் இளைய சமுதாயத்தின் அறிவுத்திறன் மேம்படுத்தவும் அறிவித்திறனை மேம்படுத்துவதற்காக இந்த நடத்தப்பட்ட போட்டிகள் நடைபெற்றது.

முதல் பரிசை காவேரி பெண்கள் கல்லூரி, இரண்டாவது பரிசை ஜமால் முகமது கல்லூரியும், மூன்றாவது பரிசை ஜோசப் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றனர்.

இந்நிகழ்வில் உயிரித்தொழில்நுட்பத் துறையின் உதவி பேராசிரியர்கள் ஜாஸ்மின்ஜெமிமாஜெயந்தி, சிந்தியா, வினித், லீலாவதி அமிர்தாஆனந்தி மற்றும் பல்வேறு கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.