இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

0 301
Stalin trichy visit

திருச்சி, நவ.2  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவிமங்கலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்  பழனிச்சாமி(38). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது் இவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாகஉள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே அவர் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 31 ம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிமாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.