திருச்சியில் வெள்ளாமை இயக்கம் சார்பில் உரிமைக்கான போராட்டம்
திருச்சியில் வெள்ளாமை இயக்கம் சார்பில் உரிமைக்கான போராட்டம் நடைபெற்றது
வெள்ளாமை இயக்கம் சார்பில் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு உரிமைக்கான போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது,
இதில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் தமிமுன் அன்சாரி,
விடுதலைப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் கே எம் சரீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்,
போராட்டத்தின் கோரிக்கையாக தமிழ்நாட்டிலுள்ள 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிருத்தவர்கள் சதவீதம் 6.12% ஆகும். அதாவது கிருத்தவ மக்கள் தொகையின் எண்ணிக்கை 44,18,337 ஆகும். இதில் 60 சதவீதத்தினர்கள் கிருத்தவ பறையர்கள் ஆவார்கள். இவர்களின் மக்கள் தொகை 26,28,910 ஆகும். இது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4% ஆகும். ஆனால் இவர்கள் அரசியல்,கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதாரம், மற்றும் திருச்சபையில் கீழ்க்கண்ட முறையில் புறக்கபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4% -மாக உள்ள கிருத்தவ பறையர்கள் சார்பாக 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தற்போது ஒருவர் கூட இல்லாதது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.4 % மாக உள்ள கிருத்தவ பறையர்கள் சார்பாக இரண்டு மக்களவை உறுப்பினராவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்ததொரு அரசியல் கட்சியினரும் எம்மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கிருத்தவ மதத்திலுள்ள பறையர்கள் பெரும்பான்மை / தீர்மானிக்ககூடிய சட்ட மன்ற தொகுதிகள் 1.திருச்சி (கிழக்கு) 2.லால்குடி 3. தஞ்சாவூர், 4.திருவையாறு 5.திருவிடைமருதூர் 6. வேலூர் 7.விழுப்புரம்8. முகையூர் 9. செங்கல்பட்டு 10. திண்டுக்கல் 11. நீலகிரி 12. கம்பம் 13. விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இருந்தும் ஒன்றில் கூட
சட்டமன்ற உறுப்பினர்களாக எம்மக்கள் இல்லாதது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கிருத்தவ மதத்திலுள்ள ஆதிக்க சாதி என்று சொல்லக்கூடியவர்களுக்கு மட்டும் ” சிறுபான்மையினருக்கான தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் கிருத்தவ மதத்திலுள்ள பெறும்பான்மை பறையர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் தொடக்கத்திலிருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிவாழ்கின்றோம். இதற்கு காரணமாக உள்ள உள்இட ஒதுக்கீடு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கிருத்தவர்களில் அதிக எண்ணிக்கையில் கிருத்தவ பறையர்கள் உள்ளன. எனினும் கிருத்தவ நிறுவனங்கள் நடத்துகின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆதிக்க சாதி என்று சொல்லி சொல்லுகின்ற கிருத்தவர்களுக்கு மட்டும் உயர் பதவிகள் கொடுக்கப்படுகின்றன ஆகையால் இதுவும் வருத்தம் அளிக்கிறது.
மேற்கண்ட சமூக அநீதிகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் அவர்களுக்கு வெள்ளாமை இயக்கம் கேட்டுக்கொள்கிறோம். என்ற தீர்மானத்தை வலியுறுத்தி கூறினர்,
இந்த போராட்டத்தில் தலைவர் ஜான் துணைத்தலைவர் லீயோராஜ்,செயலாளர் ஆரோக்கியநாதன்,
துணைச் செயலாளர் மரியா அகிலா ராஜன்,அமைப்பாளர் அந்தோணி,
தலைமை சட்ட ஆலோசகர் ஆரோக்கியதாஸ்,வழக்கறிஞர் அணி செயலாளர் ஆண்டனி பிரபாகரன்,அலெக்ஸாண்டர்,மகளிர் அணி தலைவி சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்