திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு : 77 பயணிகள் தப்பினர்

0 112
Stalin trichy visit

திருச்சி அக்.23  திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.இதில் பயணம் செய்த 77 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.புறப்பட்ட உடன் இண்டிகோ விமானத்தில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை திருச்சிக்கு அனுப்பி வைக்க விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.நீண்ட நேரத்திற்கு பின் பயணிகள் பிற்பகலில் திருச்சிக்கு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.