சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் : தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி அறிவிப்பு

0 178
Stalin trichy visit

திருச்சி அக்.23  தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் உயிர் என்றால் அலட்சியமா?
வரி வசூலிப்பதில் காட்டும் நெருக்கடிகளை மக்களின் அடிப்படைத் தேவை களை உடனடியாக செய்து தர வலியுறுத்தி அதிகாரிகளின் மீது காட்ட வேண்டாமா?
மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மரண பள்ளங்கள். இதனால்
தினம் தினம் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே விழுந்து கை கால்கள் உடைந்து செல்லும் பரிதாப அவலங்கள் நடக்கிறது.
ஒரு வார மழைக்கு தாக்கு பிடிக்காத சாலைகள் அதிலும் பாதி சாலைகள் ஓட்டு சாலைகள் சரி அந்த ஒட்டுசாலைகளை யாவது ஒழுங்காக பராமரிக்க வேண்டாமா?
இன்னமும் ஒரு வார காலத்தில் போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் சரி செய்யாவிட்டால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் .
இவ்வாறு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.