மன உளைச்சலில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

0 381
Stalin trichy visit

திருச்சி, பிப். 15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பேட்டையில் சரக்கு வானத்தை பழுது நீக்க பணம் இல்லாததால் மனமு டைந்த இளம் பெண்  நேற்று மதியம் 3.30 மணியளவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி அருகே பச்சாம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி  கனிமொழி (36). இவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவரது கணவர் ஞானசேகர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு வாகனம் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய ரூ.20000 தேவைப்பட்டபட்டுள்ளது. சரக்கு வாகனத்தை பழுது நீக்க பணம் இல்லாதால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கனிமொழி அரளி விதை விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.