தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
திருச்சி, ஏப்.24 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து ஏரி குளங்களையும், கிளைப்பாசன வாய்க்கால்களையும் தூர்வாரியும், தடுப்பணைகளை புணரமைக்கப்படுதல் வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகாவில் அணைக் கட்டியே தீருவேன் என்கிற கர்நாடக முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டிற்கு கர்நாடக வழங்கி வேண்டிய 92 டி. எம். சி தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் குறுவைக்கும், சம்பாவுக்கும் பெற்றுத்தர கோரியும் ஜூன் 8 ஆம் தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கமும், தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியும் இணைந்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்காச்சோளத்திற்கு வறட்சி நிவாரணம் விட்டுபோனவர்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோனேரி ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும்.
அரியலூர் மாவட்டம், துத்துரையும், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமத்தையும் இணைத்து கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு காலதாமதப்படுத்தாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்