மணப்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 3 மணப்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மணப்பாறை நகரம், பொன்னம்பட்டி பேரூராட்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
அப்போது வீடுவீடாகச் சென்ற அமைச்சர் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும், திராவிட மாடல் அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்தும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். மணப்பாறை நகரம் ஏழாவது வார்டு இராமலிங்க தெரு, மணப்பாறை ஒன்றியம் உசிலம்பட்டி ஊராட்சியில் ஆஞ்சநேயர் நகர், வையம்பட்டி வடக்கு ஒன்றியம் கல்கொத்தனூர், பொன்னம்பட்டி பேரூராட்சி, முஸ்லீம் நடுத்தெரு, மருங்காபுரியில் மேலூர், கல்லுப்பட்டி, மற்றும் கோவில்பட்டி பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதில் எம்பி., சல்மா மற்றும் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.