அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அமாவாசை கணக்கு?

0 227
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், திருச்சி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் சாலை பணிகள் பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு க சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்ற செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்ட த்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் இன்னும் 9 மாத அமாவாசைக்கு பின் எல்லா நிலையும் மாறும். 7 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என கோவையிலிருந்து பயணம் தொடங்க உள்ளார்.

திமுக ஆட்சியில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எவ்வளவு கூறினாலும் செவடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருக்கிறது.திருமணத்தை பிரமாண்டமாக செய்து விட்டு குடும்பம் நடத்தாதது போல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் கருத்துரு கொடுத்து பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

மூன்று சிலைகள்(பெரியார், அண்ணா, கலைஞர்) வைப்பதற்காக பேருந்து நிலையம் திறக்கப்பட்டதா என திருச்சி மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆறு மாத காலத்திற்கு பின் பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அதிமுக ஆட்சி வந்து விடும் என்கிற பயத்தில் அவசர அவசரமாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1839 பேர் இரண்டரை ஆண்டுகாலம் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களில் 4 சதவீத விபத்துக்கள் திருச்சி மாவட்டத்தில் தான் நடந்து வருகிறது. திமுக ஆட்சி ஓட்டையாக இருப்பதற்கு ஒரே சாட்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம். எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருச்சி திமுக 2026 ல் மூழ்கி விடும். தெருவிலும் தேனீர் கடைகளிலும் பேசப்படும் ஆட்சியின் அவலம் வாக்குச்சாவடிகளில் முடியும் என அண்ணா கூறியுள்ளார். திமுக ஆட்சியின் அவலங்கள் நாம் பேசுவது 2026 தேர்தலில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும். திருபுவனம் இளைஞர் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் காவல்துறை போலி எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது. Sorry என கூறிவிட்டால் போன உயிர் திரும்பி வந்து விடுமா என எல்லோரும் கேட்டு கொண்டிருக்கார்கள். தமிழ்நாட்டின் குடிமகனை அரசே கொலை செய்துள்ளது என நீதிபதி கூறியுள்ளார். திருபுவனம் இளைஞர் கொலை போல் அதிமுக ஆட்சியில் இது போல் கொடுமை நடந்தது இல்லை.எல்லா வரிகளும் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி எப்போதும் முடியும் என மக்கள் நொந்து போய் உள்ளார்கள்.

2026 தேர்தலில் அதிமுக சின்னம் பொருந்திய பட்டன் பொத்து போகும் அளவிற்கு மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். 9 அம்மாவாசையில் திமுக ஆட்சி மண்ணை கவ்வி அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபாஸ்கர், ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட அமைச்சர்கள் விழித்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சொத்து வரி குடிநீர் வரி மின் கட்டணம் ஆகிய அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் கடந்த 2 அரை ஆண்டுகளில் மட்டும் 1859 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் திருச்சி மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு இருந்தது.

மழுப்பல் பதில்:

பாஜக வழிக்காட்டல் படி இ பி எஸ் ஓபிஎஸ் சசிகலா அனைவரும் ஒன்றிணைவீர்களா என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என அனைவரும் கூறுகிறார்கள் என்று மழுப்பலான பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.