தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம்

0 236
Stalin trichy visit

திருச்சி, ஏப்.24  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் லால்குடி கிளையின் நிர்வாகக்குழு கூட்டம் கிளைத் தலைவர் க.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோடையில் புத்தகங்களோடு கொண்டாடுவது உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது, கோடை அறிவியல் திருவிழா நடத்துவது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் க.பகுத்தறிவன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.ஜி.இளஞ்சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் மாநில, மாவட்ட முடிவுகளை எடுத்துக் கூறினார். கிளைச் செயலாளர் த.ரூல்டாப் நான்சி அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நிறைவாக கிளைப் பொருளாளர் பெ.வனிதா தேவி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.