புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு
திருச்சி ஜன17 திருச்சி கே கே நகர் மாணிக்கம் பிள்ளை நகர சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் சாமுவேல் விஜயகுமார் (வயது 37) இவர் மோப்ப நாய் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 14 ந்தேதி இரவு கடையிலிருந்து புரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 15 ந்தேதி பொங்கல் அன்று காலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சாமுவேல் விஜயகுமார் இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஏர்போர்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.