நண்பரை கொலை செய்ய முயற்சி : இரண்டு ரவுடிகள் கைது

0 101
Stalin trichy visit

திருச்சி ஜன 17 திருச்சி திருவரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று திருவரங்கம் சிங்கர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற ராமச்சந்திரன் (வயது 22.)   கஞ்சா ரவுடி.
திருச்சியில் அதே பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது24) இவரும் ரவுடி பட்டியலில் உள்ளார்.மேலும் திருவரங்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் வெங்கடேசன் வீட்டில் வைத்து மது அருந்தினர். அப்போது வெங்கடேசனுக்கும்,
மற்ற மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்கி,மாதேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்து எட்டி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தள்ளி
விட்டனர் இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கி, மாதேஷ் ஆகிய இரண்டு ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஸ்ரீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.