அரசு ஊழியர்களின் 22 கால கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

0 147
Stalin trichy visit

அரசு ஊழியர்களின் 22 கால கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி பேட்டி.

முதலமைச்சர் முக ஸ்டாலின்  கடைசி மாத ஊதியத்தில் 50%
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்(TAPS) என்ற பெயரில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார் அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பால்பாண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்   பொ. ரவிச்சந்திரன்
மாநில தலைவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
பொன்னுச்சாமி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் வை சைவராசு திருச்சி மாவட்ட மாநகர செயலாளர் ஆசிரியர் மன்றம்
சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்

திருச்சி விமான நிலையத்தில்
முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

நீண்ட நெடிய நாள் கோரிக்கை ஏறத்தாழ 22 ஆண்டு கால அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று நிறைவேற்றியுள்ளார்..

தொடர்ந்து ஒவ்வொரு சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதில் உரிய தீர்வு கண்டு பின்பு முதல்வரிடம் எடுத்துரைத்தேம். அந்தக் குழுவில் எனக்கும் ஓர் இடம் கொடுத்த  தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிரறேன். அதன் பிறகு தற்போது முதல்வர் இந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் அறிவித்த இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் எனது சார்பாகவும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறிவிப்பை நாங்கள் அறிவித்துள்ளோம் .
இது குறித்து கேள்வி கேட்க யாருக்கும் தகுதி இல்லை என்றார்.

ஒட்டுமொத்தமாக எங்களது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் அரசு ஊழியர் சார்பாகவும் முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.