பா.ஜ.க.வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

0 239
Stalin trichy visit

நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு வெளியேறு என வலியுறுத்தி இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

பெட்ரோல் டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை, குறைக்க வேண்டும், ஹிந்தி திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்கள் ஒருமைப்பாட்டு குலைத்து நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு வெளியேறு என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று நாள் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக முதல் நாளான இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டனர். அப்பொழுது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.