மூதாட்டி வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத்துறை

0 230
Stalin trichy visit

மணப்பாறை காந்தி நகர் மூதாட்டி வீட்டில் உள்ளே இருந்த நல்ல பாம்பு பத்திரமாக பிடித்து சென்ற தீயணைப்புத் துறையினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை  காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி வயது 70 இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உள்ள கட்டிலில் துவங்கி கொண்டிருந்த மூதாட்டி வீட்டின் வெளியே சென்று விட்டு வீட்டினில் உள்ளே செல்வதற்காக உள்ளறை கதவைத் திறந்த போது  பெரிய பாம்பு ஒன்று கட்டில் அடியில் செல்வதை    பார்த்து வீட்டில் வெளியே வந்து அக்கம்பக்கத்தினர் அழைத்து கூறியுள்ளார். இதைப் பற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் மணப்பாறை தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து வீட்டில் உள்ளே சென்று அந்தப் பாம்பை  பிடிப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டனர், சிறிது நேரம் வரை காணவில்லை என்று உள்ளறையில் இருந்த பீரோ ஒன்றை நகற்றும்போது   படம் எடுத்தவாறு நல்ல பாம்பு ஒன்று இருப்பதை அறிந்து அவர்கள் வைத்திருக்கும் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பத்திரமாக பிடித்து வீட்டின் வெளியே எடுத்து வந்தனர்.  பிடித்து வந்த நல்ல பாம்பை ஒரு பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.