மனைவியை அம்மி குழவியால் அடித்து கொலைசெய்த கணவன்

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (55). இவரது மனைவி செங்கொடி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிய நிலையில் 22-வயதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்

கணவன் சிவக்குமார் கடந்த எட்டு மாதங்களாக காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி செங்கொடி படுத்திருக்கும் பொழுது கணவன் சிவக்குமார் வீட்டிலிருந்த அம்மி குழவியை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே செங்கொடி தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.  மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.