ஜாமீனில் வந்தவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடாததால் கைது

0 356
Stalin trichy visit

கோவை மாவட்டம் காலாப்பட்டிரோடு நேருநகர் பெரியார்நகரை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 21). இவர் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த மாதம் 12-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சூர்யபிரகாஷ் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். ஆனால் 28-ந் தேதி முதல் அவர் கையெழுத்து போடவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, சூர்யபிரகாஷை கைது செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.