வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயம்.மர்ம நபர்கள் கைவரிசை.
லால்குடி அருகே புள்ளம்பாடி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 53 வயதான ஜெய்சங்கர். இவர் கடந்த 5 ந்தேதி இரவு தனது பஜாஜ் பல்சர் மோட்டார் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் 6 ந்தேதி காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது.மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மோட்டார் பைக்கை பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.மோட்டார் பைக் கிடைக்காத்தால் கல்லக்குடி காவல் நிலையத்தில் முகார் கொடுத்தார்.புகாரின் போரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.