மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
திருச்சி ஜன.30 திருச்சி காந்தி மார்க்கெட் பூ மார்க்கெட்டில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவுஉடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி பெரியார் நகர் குழுமிக்கரை ரோடு பிஷப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பாப்பாத்தி ( வயது 76) இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வந்தார்.அங்கு பூ மார்க்கெட் உள்ளே சென்றபோது பாப்பாத்தி மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது மகன் கர்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் .இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.