திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் – வெங்கடேஸ்வரி இவர்கள் இறந்து விட்டனர், இவர்களின் 16 வயது மகள், பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார்.
சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்,கலால் துறையில் பணியாற்றும் ஒருவர் என சிலர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்கள் சிறுமி திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்,இதன் காரணமாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார் – இதனை கலைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அரசு செவிலியர் சிசிலியானாவிடம் பேரம் பேசப்பட்டது,இதன் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மாத கருக்கலைக்கப்பட்டு உள்ளது,ஆனால் கருகலைப்பில் சிக்கல் ஏற்படவே மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர், சிறுமி மற்றும் சிலரிடம் விசாரணையில் பாலியல் தொந்தரவு செய்வதாக திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.
மேலும் சிறுமியடம் குழந்தைகள் நல ஆணையம் நடத்திய முழுமையான விசாரணையில் கள்ளகுடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய காவலர் பிரகாஷ் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது – பிரகாஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி உள்ளதை அடுத்து, இது குறித்து பிரகாஷின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பிரகாஷ் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தார்,இதனை அடுத்து உடனடியாக அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமியுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொடுத்து சிறுமியின் கற்பை சூறையாடி அரசியல்வாதிகளும் அரசு பணியிலும் உள்ள பலர் இன்னும் அந்த கிராமத்திலேயே தலைமறையாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.