மணல் கடத்தி வந்த வேன் பறிமுதல்

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே மணல் கடத்தி வந்த வேனை காட்டுப்புத்தூர் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

திருச்சி, பிப். 21  காட்டுப்புத்தூர் அருகே காடுவெட்டி காவிரி ஆற்றில் இருந்து வேனில் மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீசார் தொட்டியம் காட்டுப்புத்தூர் சாலையில் காடுவெட்டி மாரியம்மன் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, வேனை ஒட்டி வந்த ஓட்டுநர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து போலீசார் சோதனையிட்டதில் வேனில் சட்ட விரோதமாக காவிரி ஆற்று மணல் கடத்தி வருவது தெரிந்து வேலை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தவர் காடுவெட்டி மேலவழிகாடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ராகுல் (26) என தெரியவந்து அவர் இது போலீசார் வழக்கு பதிந்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.