வயல்சாகுபடி பயிர்கள் : வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

0 492
Stalin trichy visit

திருச்சி, டிச. 6  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் வயல் சாகுபடி பயிர்களை ஆய்வு மேற்கொண்டார். சாகுபடி வயலில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் சுபத்ராகிருஷ்ணனுக்கு 100 சதவீதம் மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கினார்.மேலும் சுபத்ராகிருஷ்ணன் வயலில் சாகுபடி செய்துள்ள சீரகசம்பா, ஆத்தூர் கிச்சடி சம்பா வயல்களை பார்வையிட்டார்.

லோகநாதன் வயலில் தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மண் புழு உரம் படுக்கை திடலை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குநர் சாந்தி,
மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி,தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மாரியப்பன், வேளாண்மை அலுவலர் நாகராஜன், துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி, வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.