பள்ளி குழந்தைகளை வலிமையானவர்களாக உருவாக்க லயன்சிரப் வழங்கல்

0 237
Stalin trichy visit

2019 – 2021இந்திய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு அறிக்கையின் படி25.0% ஆண்கள் 15 வயது முதல் 49 வயது முடிய உள்ளவர்களும் 57. 0% பெண்கள் 15 வயது முதல் 49 வயது
முடிய உள்ளவர்களும் இரத்த சோகை உடையவர்களாக இந்திய அளவில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 54.8% பெண்கள் 15 வயது முதல் 49 வயது முடிய உள்ளவர்களும்
50.4% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும் இரத்த சோகையோடு உள்ளனர் –

இதனைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு பள்ளிகளில் சத்துணவு தற்போது காலைச் சிற்றுண்டி,வளரிளம் பெண்களுக்கு சிவப்பு அவல் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழகத்தின் குழந்தைகள் இரத்த
சோகையின்றி வலுவாக உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ இருப்பினும் பெற்றோர்களும் தனியார் நிறுவனங்களும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு குழந்தைகளை வலிமையானவர்களாக மாற்ற முயன்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம்,திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர்நிலைப் பள்ளிப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
இன்று  LION Dates நிறுவனத்தின் மூலம் ஒரு கிலோ எடையும் 390 ரூபாய் மதிப்பும் உள்ள
Lion Dates Syrub வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் .வைத்தியநாதன், கோட்டத் தலைவர்  ஆண்டாள் ராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்  இராதா,  செல்வி மணி, Lion Dates நிறுவன பொறியாளர்  சிவா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் வாகனம் மூலமாக நேரடியாக
3000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டது,
LION Dates நிறுவனத்தினருக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அலுவலர்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.