வேத நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா
திருச்சி, அக். 27 தொட்டியம் அருகே திருநாராயணபுரம் ஆதிரெங்கம் அருள்மிகு வேத நாராயண பெருமாள் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது,
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பகுதியிலுள்ள திருநாராயணபுரத்தில்
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பொன்னிவள நாட்டின் அகண்ட காவிரியின் வடகறையில் மா பலா வாழை வெற்றிலை நெல் விலையும் சோலைகள் சூழ்ந்த திவ்ய தேசத்தில் தொட்டியத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு வேத நாராயணர் என்ற திரு நாமத்தோடு எம்பெருமான் இங்கு சிறப்புடன் விளங்குகின்றார்.
ஆதியிலே திருபுவன சக்கரவர்த்தியால் அமையப்பெற்ற திருக்கோவில், அடுத்தடுத்து மன்னர்கள் பலரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்கோவில் ஆகும், சோதி என தீயெழும்ப திருநறையூர் அரையர் தொல் குடும்பம் உயிர் கொடுத்து காத்த திருக்கோவில், வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் ஸ்ரீ ஹனுமான் கம்பத்தடியில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற திருக்கோவில், வேதனைக்கு வேதம் உபதேசித்த திருக்கோவில் புராண கால முதல் இன்று வரை சிறப்புடன் விளங்கும் திருக்கோவில் இச்சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் கடந்த 25 ஆம் தேதி காவேரியில் இருந்து யானை மீது தீர்த்த குடம், கோ அஸ்வத்துடன் மேள வாத்தியத்துடன் திருவிதி உலா நடைபெற்றது, 26 ஆம் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வத் பூஜை, விஸ்வரூபம் உத்வஸவர், பெருமாள் ஸ்தாபன திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசால பூஜைகள் தீபாராதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோ பூஜை, விஸ்வரூபம், திருவாராதனம் மற்றும் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்று கடம் புறப்பாடு செய்து விமான கலசங்களுக்கு மகா திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது, பக்தர்கள் அனைவருக்கும் ட்ரோன் மூலம் புனித தீர்த்த நீர் தெளித்தது, விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான 50 ற்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்..