திருநாவுக்கரசர் எம்.பி. குறித்து அவதூறு : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

0 449
Stalin trichy visit

திருச்சி, பிப். 26 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி மீதும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட மாநகர காவல் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஆகியோரின் தலைமையில் திருச்சி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதில் கோட்டத்தலைவர்கள் எட்வின்ராஜ் , பிரியங்கா பட்டேல், மணிவேல் அண்ணாதுரை, கனகராஜ், மார்ட்டின், குமரேசன், பாலகிருஷ்ணன், தினகரன், கே.எஸ்.ரகுநாத், அர்ஜுன், எழிலரசன், பரணி, விஜயகுமார், மகேந்திரன் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.