திருச்சியின் பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்!
திருச்சி பொன்மலை காவல்நிலைய எல்லையில் உள்ள ஒயின்ஷாப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றதாக கடந்த 27ம் தேதி பிரபல ரவுடி ஜெய் (எ) ஜெய்குமார் (எ) கொட்டப்பட்டு ஜெய் அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் மீது பொன்மலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய், வழிமறித்து நீதிமன்றம் நீ சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும், தனக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியனுக்கு எல்லா இடத்திலும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், தன்னை என்கவுன்டர் லிஸ்டிலிருந்து பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும்பட்சத்தில் அவர்களை கொலை செய்துவிடுங்கள் என்று அல்லித்துறை சாமியார் கூறியதாகவும், கொட்டப்பட்டு ஜெய் சாட்சியங்களை மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரவுடி ஜெய் அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல்துறை மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதுபோல் உரையாடியது மக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரை பெற்று பொன்மலை காவல்நிலைய குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் போலி சாமியார் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம் தன்னை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்பட்ட நபர் போலி சாமியார் என்று தெரிய வந்ததால் போலி சாமியார் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம், சுமார் 30 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி ஜெய்க்கு துணையாக செயல்பட்ட வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது கொட்டப்பட்டு ஜெய் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து இன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் ஜெய் (எ) ஜெய்குமாருக்கு குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இனிவரும் காலங்களில் யாரேனும் முக்கிய பிரபலங்களின் பெயர்களை போலியாக பயன்படுத்தி பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo