TN 2026 திரைப்படம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்: திருச்சியில் நடிகர் நட்டி நடராஜ் பேட்டி

0 57
Stalin trichy visit

திருச்சி, ஏப்.15 TN 2026 திரைப்படம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமையும் – திருச்சியில் நடிகர் நட்டி என்ற நடராஜ் பேட்டி

கண்ணன் ரவி தயாரிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடராஜ் தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நடிப்பில் டிஎன் 2026 (தங்க நட்சத்திரம்) திரைப்படத்தின் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் உமாபதிராமையா நடிகர்கள் நட்டி என்கின்ற நடராஜ், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் திருச்சி எல் ஏ சினிமாஸ் திரையரங்கில் படத்தைக் காண வந்திருந்த ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தோடு விசில் அடித்து அவர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த படக்குழுவினர்

இத்திரைப்படம் அரசியல் விழிப்புணர் படம் ஆக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலத்து இளைஞர்கள் அரசியலில் பக்குவப்பட்டு வருகின்றார்கள் என தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய ஊடகங்களுக்கு திரைப்பட ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.