சுற்றுலா வேனை திருடியவர் கைது!

0 305
Stalin trichy visit

திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் மோகன சுந்தரம்(வயது 44). இவர் சொந்தமாக சுற்றுலா வேன் ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வேன் ஸ்டாண்டில் தனது வேனை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது

அந்த வேனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அப்போது நெடுஞ்சாலையில் சுங்கவரி சாலையை கடக்கும் போது, வேனில் பாஸ்டாக் இருந்ததால் நுழைவு கட்டணம் செலுத்தியதற்கான குறுச்செய்தி மோகனசுந்தரம் செல்போனுக்கு வந்தது. அதனை தொடர்ந்து சென்ற போலீசார் வேனை திண்டிவனத்தில்

அருகில் உள்ள டோல் பகுதியில் மீட்டனர். வேனை ஓட்டிச்சென்றவர் தப்பிச்சென்றார். இதில் அந்த வேனை திருடிய மர்ம நபர் தப்பிச் சென்றார். இந்நிலையில் வேலை திருடிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் (என்கிற) விஜயரங்கன்(வயது 25) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.