உயிரிழந்த நாத்தனாரை பார்க்கவந்த நிறைமாத கர்ப்பிணி அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்!

0 745
Stalin trichy visit

திருச்சி கல்லனை சாலையில் பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது. இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா(33), கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகியோர் உயிரிழந்தனர். சத்யானந்தம் திருச்சி மகாத்மா காந்தி அரசு

 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உயிரிழந்த சூர்யா, படுகாயமடைந்த சத்யானந்தத்தை பார்க்க, சூர்யாவின் தம்பி,திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே தொட்டியப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், அவரது மனைவி கிருத்திகா (21) ஆகியோர் நேற்றிரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது சூர்யாவின் உடலை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கிருத்திகா உயிரிழந்தார். இறக்கும்போது கிருத்திகா, நிறைமாத (9 மாதம்) கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.