அதிமுக பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை

0 140
Stalin trichy visit

திருச்சி, அக்.6  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் ஊராட்சியில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில் மாவட்ட கழகத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து, பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கும் கூட்டம் மூன்றாம் கட்டமாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் எம்.பி.மான ப.குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் கழக பூத் பாக பயிற்சி பொறுப்பாளர் விபி. பிரியா ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் ப. குமார் பேசியதாவது..

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பதவி வெறியில், திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் நிறைவேற்ற முடியாத பல பொய் வாக்குறுதிகளை அளித்து,
ஆட்சி அமைத்தனர்.

அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும்,மாணவ மாணவிகளுக்கும்,்பெண்களுக்கும் இப்படி ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு.
வரும் 2026 ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டு் ஆட்சிக்கு வர முயற்சிப்பார்கள்.

எனவே அந்தந்த வார்டுகளில் உயிரிழந்தவர்கள் பெயர், நீண்ட காலமாக ஊரில் இல்லாதவர்கள் பெயரினை குறித்து வைத்துக் கொண்டு கள்ள ஓட்டு் போடுவதனை நமது நிர்வாகிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென கூறினார்.

இந்நிகழ்வில் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாள‌ர் அருணகிரி முன்னிலை வகித்தார்.மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்வம்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் தினேஷ்ராஜா,  ஒன்றிய கழக அவைத்தலைவர் ராமசாமி,
ஒன்றிய கழக துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய கழக பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட கழக பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தனசேகர், ஒன்றிய அம்மா பேரவை தலைவர் செல்வராஜ், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஒன்றிய கழக,கிளை கழக நிர்வாகிகள் ஒரத்தூர் பாகம்17,18 கல்லகம் பாகம் 19,20,21 கீழரசூர் பாகம் 22,23 மேலரசூர் 24,25 முதுவத்தூர் பாகம் 61,62 ஆகிய  பாக பூத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.