உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

0 303
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தில் உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

லால்குடி வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ்  உழவன் செயலி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமமான கொன்னைக்குடி கிராமத்தில் நடைபெற்றது

இதில் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்படுத்துதல் குறித்து தினேஷ் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.வேளாண்மை உதவி அலுவலர் விஸ்வநாதன் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்தும்,உழவன் செயலியில் பதிவு செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினார்.இதனைத் தொடர்ந்து வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க பத்து வகையான விதைகள் வழங்கினர்

மேலும் பயிற்சியில் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு பற்றிய விளம்பர பதாகைகள் கொண்டு விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள் பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் செய்திருந்தார் இப் பயிற்சியில் கொன்னை குடி கிராமத்தைச் சேர்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.