திருச்சி மாநகராட்சி வரவு – செலவு திட்ட அறிக்கை தாக்கல்

0 295
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26  திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மாமன்ற கூட்டாரங்கில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர் முத்து செல்வம் தாக்கல் செய்தார். பிறகு அனைவரது முன்னிலையில் நிதிக் குழு தலைவர் முத்து செல்வம்
வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவமும், கணினி மென்பொருட்கள் துறையில் சமீப காலத்தில் அதிக வளர்ச்சி பெற்று வரும் திருச்சிராப்பள்ளி நகரத்தில், மாநகராட்சியால் மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், எதிர்கால நகரமயமாக்குதலைக் கருத்தில் கொண்டும், அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதலை தடுக்க தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதை கருத்தில் கொண்டும் இவ்வாண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 2024- 25ம் ஆண்டில் மாநகராட்சி பொதுநிதி மற்றும் திட்டப் பணிகளின் கீழ் பெறப்பட்ட நிதிகளின் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதன்படி சிமெண்ட் சாலைகள், தார்சாலைகள், இதர சாலைகள், மழைநீர் வடிகால், அலுவலக கட்டிடம், மழைநீர் வடிக்கால், எரிவாயு தகன மேடைகளில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகள் என மொத்தம் 99279, 51 லட்சத்திற்கு பணிகள் நடந்துள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கான நிதி ஆதாரம், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் மான்யம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி நிதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சியால் பெறப்பட்ட கடன் மற்றும் மாநகராட்சி பொதுநிதி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டு மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப் பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ரூ.105.95 கோடியினை, மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள அனைத்து வரியினங்களையும் நிலுவையின்றி வசூல் செய்து ஈடு செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கொண்ட மின்விளக்குகளை பல்வேறு திறன் கொண்ட எல்.இ.டி மின் விளக்குகளாக 8264 எண்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 816 எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.மாநில நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி
மாநில நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட மற்றும் தெருவிளக்குகள் விடுபட்ட பகுதிகளில் மொத்தம் 6264 எண்கள் எல்.இ.டி மின் விளக்குகள் ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காந்தி மார்க்கெட்டை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புனரமைக்கப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்

உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே பீமநகர் பகுதியில் 5 ரோஸ் திருமண மஹால் மற்றும் குழுமிக் கரையினை இணைக்கும் வகையில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிக்கு ரூபாய் 2 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும் மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் குறுக்கே பீமநகர் பக்காளி தெரு குழுமிக்கரையினை இணைக்கும் வகையில் ரூபாய் 2 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் காவிரி ஆற்றின் தென்கரை பகுதியினை அழகுப்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 15 கோடி மதிப்பிட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திற்குள் கூடுதல் அலுவலக கட்டிடம் மற்றும் வரவேற்பு வளைவு கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும்.

மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட்ட தோப்பு தெரு 30வது வார்டுக்கு உட்பட்ட லாரி செட் 35 வது வார்டுக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம் 57 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் வங்கி காலனி 64 ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரி நகர் 65 க்கு உட்பட்ட பசுமை நகர் 60க்குட்பட்ட காஜாமலை 62க்கு உட்பட்ட பழனியப்பா நகர் 58 க்கு உட்பட்ட ராஜராஜன் நகர் வசந்த் நகர் ஆகிய பகுதிகளில் தல ரூபாய் 5 லட்சம் செலவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டு பணிகளை தொடங்கப்படும்.
திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலைய வளாகத்தில் அலுவலகப் பணிகளுக்காக வருகை தரும் அரசு உயர் அதிகாரிகள் மத்திய மாநில அமைச்சர்கள் தங்கிச் செல்லும் வகையில் ரூபாய் 4.65 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்கும் பணியினை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 236 கோடி மதிப்பீட்டில் தயார் செய்து அரசிடம் உரிய நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த பணிக்கு ரூபாய் 100 கோடி முனிசிபல் பாத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது
மாநகராட்சியில் அம்ருத் புதை வடி வடிகால் வழங்கும் திட்டம் நான்கு தொகுப்புகளாக பணிகள் நடந்து வருகின்றன நான்காவது தொகுப்பு முடியும் பட்சத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடைப்படும் தடைபடாத இடங்களில் சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தி அந்த பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீரை புதை வடிகால் குழாய்களுக்கு செல்லும் வகையும் மாற்றி அமைத்து உய்யக்கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் தலா ஒரு நூலகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 5 மண்டலங்களிலும் இட வசதிக்கு ஏற்ப தலா ஒரு உள் விளையாட்டு அரங்கங்கள் ரூபாய் ஒரு கோடி செலவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Leave A Reply

Your email address will not be published.