திருச்சிமாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, மார்ச் 6 திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட இபி ரோடு, சத்தியமூர்த்தி நகர் அருகே மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை தெற்கு பகுதி கழக செயலாளர் முன்னிலையில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கழக கொடியேற்றி புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தி 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், ரோஜர், வெங்கட் பிரபு, சுரேந்தர்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்