தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமாவை வலியுறுத்துவோம்: காங்கிரஸ் MP அக்டோபர் திலக் பேட்டி

0 17
Stalin trichy visit

திருச்சி, செப்.30 தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமாவை வலியுறுத்துவோம்: காங்கிரஸ் MP அக்டோபர் திலக் அதிரடிப் பேட்டி

திருச்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறும் போது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கம்யூனிகேஷன் கேப் (Communication Gap) இருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டுப் பேசியவர், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை கேள்விகுறியாகியுள்ளது என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த நாடாளுமன்றத் தொடரில் கல்வித்துறை அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடியது போல, வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமாவை இலக்காகக் கொண்டு குரல் எழுப்புவோம்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரைச் சேர்த்ததால், தேர்தல் ஆணையம் ஒருசார்பாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கூறியது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “எதிர்க்கட்சியினர் 24 மணி நேரமும் முதலமைச்சர் கருத்து சொல்கிறாரா என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் நிதானமாகச் செய்திகளை உள்வாங்கிய பிறகே கருத்து தெரிவிப்பார்” என்றார். மேலும், தாய்மார்களுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை கனிமொழி விமர்சித்தது பற்றிய கேள்விக்கு, சமுதாயத்தில் சில பழமைவாத நடைமுறைகள் தொடர்ந்தாலும், பெண்களுக்கான இதுபோன்ற திட்டங்கள் அவசியமான ஒன்றே என்று கூறினார்.

தாராபுரம் தொகுதியில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில், இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் திமுக சார்பில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்தார். இதுபோன்ற பேச்சுகள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தேர்தல் முடிவில் திமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கும்,

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி 3-4 நாட்களில் காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்குவார்கள்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லாமல் பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

காவேரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசியவர், கர்நாடகாவில் அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிப்பது போல், தமிழ்நாட்டிலும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாநில நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார். காவேரி நீர் விவகாரத்தைச் சீராகக் கண்காணிக்கத் தனியாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.