திருச்சி தெற்கு மாவட்ட திமு.க. சார்பில் ஒன்றிய அமைச்சர் உருவபொம்மை எரிப்பு

0 255
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிக பேச்சை கண்டித்து உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைச்சர் திரு.தர்மேந்திரபிரதான்  பேச்சை கண்டிக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேச சொல்வதை பேசுகிறாரா? கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டம் கல்விக்கானது. மாநில மக்களின் உரிமைக்கானது. அது வெல்லும்.

எங்களை பொறுத்தவரை அது ஆர்.எஸ்.எஸ்.கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று வலியுறுத்தப்பட்டது.

 

 

Leave A Reply

Your email address will not be published.