விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த போது விபத்தில் சிக்கிய திருச்சி மாணவர் உயிரிழப்பு

0 188
Stalin trichy visit

தஞ்சாவூர், மார்ச் 24 தஞ்சை அருகே நடந்த த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்த போது அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யா சாமிபட்டியில் கடந்த 4 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து பிரச்சார வேனில் தஞ்சை வந்தார். அப்போது விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். தஞ்சை மாவட்டம், வளம்பக்குடி அருகே விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த கீழக்கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ் (வயது 19), அவரது நண்பர் ஹாரூண் (20) ஆகிய 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதி உடனடியாக 2 பேரும் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் விக்னேஷ் தலையில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மற்றொருவர் ஹாரூணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. காயம் அடைந்து சிகிச்சை பெற்ற ஹாரூணை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. முரசொலி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாணவர் விக்னேஷ் அவசர கிசிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது பெற்றோர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கடந்த 20 ஆம் தேதி தஞ்சையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை விக்னேஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.